தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மகேஷ் பாபு தொடர்ந்து நடித்து வெற்றிகளை குவித்து வருவதால் அவரது மார்க்கெட் உயர்ந்த வண்ணமே இருக்கின்றன. நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருப்பதால் இவரது படங்கள் அங்கேயும் டப் செய்யப்பட்டு வெற்றியை அள்ளுகின்றன.
நடிகர் மகேஷ்பாபு சினிமாவில் ஓடிக் கொண்டிருந்தாலும் குடும்பங்களையும் அப்பொழுது நேர்த்தியான முறையில் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். இவரது நடிப்பில் இப்பொழுது சர்க்காரு வாரிபட்டா என்ற படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் ஒரு முக்கிய விஷயத்தை போட்டு உடைத்துள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. நானும் எனது மனைவி குடும்பங்கள் என அனைவரும் இரவு டின்னர் ஒன்றுக்கு சாப்பிட ரகசியமாக சென்று இருந்தோம் அப்போது இரு பெண்கள் எங்களை கண்டுபிடித்து விட்டார்கள் உடனே அவர்கள் எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டனர்.
ஆனால் நான் குடும்பத்துடன் வந்ததால் நான் எடுக்க முடியாது என ஒருவழியாக சொல்லி மறுத்து விட்டேன் ஆனால் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் இருவரும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் என கூறினார். பின் இருவரையும் தேடி பார்க்க சொன்னேன் ஆளே இல்லை பின் ஒரு வழியாக இயக்குனர் சங்கரை சந்தித்து.
நடந்த விஷயங்களை சொல்லி உள்ளார். நடிகர் மகேஷ்பாபு அதற்கு அவர் நடிகர் நடிகைகள் வாழ்க்கையை வெளி உலகத்தில் எப்படி இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என கூலாக சொல்லி உள்ளாராம் இருப்பினும் மகேஷ்பாபு அங்கு நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு விட்டு சென்றாராம்.