நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை குவித்து வைத்துள்ள சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..

siva karthikeyan

சினிமா உலகில் மக்கள் மற்றும் ரசிகர்களின் மனநிலையை சரியாக அறிந்து அதற்கேற்றார் போல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் அதனால்தான் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் ரீதியாகவும், விமர்ச்சன ரீதியாகவும் அடித்து நொறுக்கி ன்றன.

மேலும் சொல்ல போனால் குறைந்த திரைப்படங்களில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தையும் தற்போது பெற்றுள்ளார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது அதிலும் குறிப்பாக சிவகார்த்திகேயன் முதல் 100 கோடியைத் தொட்ட திரைப்படமாக இது அமைந்ததால் தற்போது அவர் சந்தோஷத்தில் இருக்கிறார்.

மேலும் அடுத்தடுத்த படங்களிலும் சந்தோஷமாக கமிட்டாகி நடித்து வருகிறார் அந்த வகையில் இவரது கையில் டான், அயாலன், சிங்கப்பாதை மற்றும் பல்வேறு பெயர்களை படங்களிலும் கமிட் ஆகியுள்ளார். அதில் முதலாவதாக டான் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படி சிவகார்த்திகேயன் தொடர்ந்து ரசிகர்களின் மனநிலையை ஏற்றவாறு காமெடி, ஆக்ஷன்,சென்டிமென்ட் போன்ற படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அப்படி இவர் எது தெரிந்தெடுத்த நடித்தாலும் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றியடைய மாறியது. இதனால் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதன்படி பார்வையில் சிவகார்த்திகேயன் வைத்திருக்கும் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 98 கோடி என கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் பக்கத்தில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.