உலகநாயகன் கமலஹாசன் சினிமாவுலகில் 80 காலகட்டங்களில் இருந்து இப்போது வரையிலும் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். இப்பொழுது கூட இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த இயக்குனருடன் ஒப்பந்தமாகியுள்ளார்.
இவரை போலவே இவரது இரு மகள்களும் சினிமா உலகில் கொடிகட்டிப் பறக்கின்றனர் அதிலும் குறிப்பாக மூத்த மகள் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வருவதால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக வலம் வருகிறார்.
இது போதாத குறைக்கு ஹிந்தியிலும் தலைகாட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் இளைய மகளும் சினிமாவுலகில் நடித்து வருகிறார் அந்த வகையில் அஜீத் நடிப்பில் உருவான விவேகம் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன் பின் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் தற்போது கூட இவர் விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் இதுவரை சேர்த்து வைத்துள்ள முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் அவரிடம் சுமார் 45 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை ஆனால் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.