பெண் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இழுத்து வைத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவியின் “முழு சொத்து” மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

jeyam-ravi

நடிகர் ஜெயம்ரவி அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்ததால் ஜெயம் என்னும் பெயரை அடைமொழியாக வைத்துக்கொண்டே தற்போது சினிமாவுலகில் ஜெயம் ரவியாக ஜொலிக்கிறார் சொல்லப்போனால் ரசிகர்கள் இவரை ஜெயம்ரவி என செல்லமாக அழைப்பது உண்டு.

ஜெயம் படத்தை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டான அந்த வகையில் அடங்க மறு, டிக் டிக் டிக், நிமிர்ந்து நில், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, வனமகன் என சொல்லிகொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல சிறப்பான படங்களை கொடுத்துள்ளார் இருப்பினும் அண்மை காலமாக இவரது படங்கள் பெரிய அளவு வெற்றியை ருசிக்க இருக்கின்றன.

ஒரு ஹிட் படத்தை கொடுத்த போராடிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் ஜெயம் ரவி சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்துள்ளார். அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து ஜன கன மன, அகிலன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நாம் அண்மைகாலமாக சினிமா பிரபலங்கள் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து பார்த்து வருகிறோம்.

அதுபோல தற்போது நடிகர் ஜெயம் ரவி குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளிவந்துள்ளது அதன்படி பார்க்கையில்  ஜெயம் ரவி குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு சுமார் 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகிறது.