மாடல் அழகியாக பயணித்து பின் சினிமாவுலகில் 2013ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் வெளியான பட்டம் போல் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் கன்னடம், இந்தி, தமிழ் ஆகிய அனைத்து மொழிகளிலும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அதிலும் குறிப்பாக தமிழில் சினிமாவில் எடுத்த உடனேயே உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடித்த பேட்ட படத்தில் நடித்து அறிமுகமானதால் ஆரம்பத்திலேயே இவர் பெயர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் அதன் பிறகு 2021 – ல் தளபதி விஜயுடன் கைகோர்த்து மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் மாளவிகா மோகனன்.
படம் வெளிவந்து சிறப்பான வெற்றியை ருசித்ததன் காரணமாக அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்து மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இதனை தொடர்ந்து yudhra என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமாகியுள்ளார். குறைந்த படங்களிலேயே நடித்து இருந்தாலும் எல்லா மொழிகளிலும் இவர் தற்போது அறிமுகமாகி நடித்துள்ளதால்..
எல்லா இடத்திலேயும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார் அந்த ரசிகர் பட்டாளத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள அரைகுறையான ஆடையை அணிந்துகொண்டு மாடல் அழகி என்பதை மீண்டும் காட்டி அசத்தி வருகிறார். இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வண்ணமே இருக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை மாளவிகா மோகனன் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி பார்வையில் மாளவிகா மோகனன் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு சுமார் 7 கோடி இருக்கும் என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.