தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து பின் ஆக்சன் போன்ற படங்களிலும் வெற்றிக் கண்டு வந்த சூர்யா தற்போது தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அதில் வீர நடை போட்டு வருகிறார்.
அந்த வகையில் சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது ஜெய்பீம் என்ற திரைப்படமும் சூர்யா ஒரு வித்தியாசமான தேர்தெடுத்து உள்ளார். படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கியுள்ளது.
இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இந்த படத்துக்கு ஜெய்பீம் என தற்போதைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று ரிலீசாக உள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக தனுஷின் கர்ணன் படத்தில் நடித்த நடிகை திரிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், மணிகண்டன், ஜோஸ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
தீபாவளியன்று அமேசான் ப்ரைம் OTT தளத்தில் 4 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடிகர் சூர்யா பின்னி பெடல் எடுத்து உள்ளார். படம் OTT தளத்தில் வெளியாக உள்ளதால் எந்த ஒரு கட்டும் போடாமல் தணிக்கை குழு A சான்றிதழ் கொடுத்துள்ளது.
இந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த நேரம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள். இந்தப் படம் ஓடும் என கூறப்படுகிறது மேலும் சூர்யாவுக்கு இந்த திரைப்படம் சூரரைப்போற்று போல ஒரு மிகப்பெரும் வெற்றித் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.