“பொன்னியின் செல்வன்” படத்தின் மொத்த ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா.?

ponniyin selvan
ponniyin selvan

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் அந்த வகையில் மக்களின் ஃபேவரட் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் ஒரு கனவு படம் இருந்தது. இதுவரை அவர் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை இயக்கிக் கொண்டிருந்தாலும் இயக்குனர் மணிரத்தினத்திற்கு பொன்னியின் செல்வன்..

கதையை எடுக்க வேண்டும் என்கின்ற ஆசையும் இருந்தது. அதுதான் அவரது கனவு படமும் கூட இதை எடுக்க அவர் இரண்டு மூன்று தடவை திட்டம் எல்லாம் போட்டார் ஆனால் அது தோல்வியை சந்தித்தது இருப்பினும் அந்த படத்தை எடுக்க வேண்டுமென அயராது உழைத்தார். அதற்காக பெரிய தயாரிப்பு நிறுவனத்தை பிடித்ததோடு பெரிய பெரிய நடிகர்களையும் பிடித்து..

தற்பொழுது அவர் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். அதில் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது இதுவரை இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் பாடல்கள் போன்றவை வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம். மற்றும் ஐஸ்வர்யா  ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, பிரபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படம் ஒரு வரலாற்று கதை என்பதால் இந்த படத்தை ரசிகர்களையும் தாண்டி மக்களும் சினிமா பிரபலங்களும்..

பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு என்பது குறித்தும் தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் 2 மணி நேரம் 50 நிமிஷம் என தெரியவந்துள்ளது. இச்செய்தியை தற்பொழுது ரசிகர்கள் இணையதள பக்கத்தில் பரப்பி வருகின்றனர்.