சிம்புவின் “வெந்த தணிந்தது காடு” படத்தின் மொத்த ரன்னிங் டைம் மற்றும் சான்றிதழ் என்ன தெரியுமா.?

simbu
simbu

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு  இவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் அந்த வரிசையில் வெந்து தணிந்தது காடு  படம் இருக்கும் என பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படம் வருகின்ற 15-ம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 22 கிலோ உடல் எடையை குறைத்து 18 வயது பையனாக சிம்பு மாறி நடிக்கிறார் படம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மிகப்பெரிய ஒரு கேங்ஸ்டராக சிம்பு அவதாரம் எடுக்கிறார்.

இந்த படத்தில் சிம்பு சண்டை காட்சிகளிலும் சரி, காதல் செண்டிமெண்ட் காட்சிகளிலும் சூப்பராக நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், Kayadu lohar, neeraj madhav, siddhi idnani போன்ற முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் பெரிய அளவில் கவர்ந்திருக்கும் என சொல்லப்படுகிறது. அதை நாம் படத்தின் டிரைலர் மற்றும் டீசரில் பார்க்க முடிந்தது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து தான் இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் வெந்து தணிந்தது காடு படம் என்ன சான்றிதழ் எவ்வளவு நேரம் ரன்னிங் டைம் என்பது குறித்தும் நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் யுஏ சான்றிதழை பெற்றுள்ளது இந்த படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் என தெரிவிக்கின்றன. இதனை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.