தனுஷின் “நானே வருவேன்” படத்தின் மொத்த ரன்னிங் டைம் மற்றும் சென்சார் என்ன தெரியுமா.?

naane-varuven
naane-varuven

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருகிறார். இவர் அண்மை காலமாக நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக மாறுகின்றன. அந்த வகையில் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இப்பொழுது நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன்.

இந்த படம் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்த நாளில் வரலாற்று கதையான பொன்னியின் செல்வன் படம் வெளியாக இருக்கிறது. இந்த இரண்டு படங்களும் மோதிக் கொள்ள இருக்கின்றன. இரண்டு படத்திற்கும் எதிர்பார்ப்புமே தற்போது அதிகரித்துள்ளது.

குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தாலும் நானே வருவேன் படத்தின் எதிர்பார்ப்பும்.. அதற்கு நிகராக இருக்கிறதே காரணம் தனுஷ் இந்த படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் போதாத குறைக்கு படத்தை எடுத்த இயக்குனர்  செல்வராகவன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நானே வருவேன் படத்தில் இருந்து இதுவரை  டிரைலர், டீசர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  என அனைத்தும் வேற லெவெலில் இருந்து வந்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கலை புலி தாணு இந்த படத்தை பெருமையாக பேசி வருகிறார். அதனால் தான் பொன்னியின் செல்வன் படத்தை எதிர்த்து   மோதுகிறது அந்த அளவிற்கு படக்குழு ரொம்ப கான்ஃபிடண்டாக இருக்கிறதாம்.’

இப்படி இருக்கின்ற நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் என்ன சான்றிதழ் என்ன என்பது குறித்து தகவல்களை உள்ளது இந்த படம் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது. படத்தின் ஒத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் என தெரியவந்துள்ளது. இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.