நடிகை சன்னி லியோன் சினிமா உலகில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாக அந்த மாதிரியான படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ஒரு கூட்டத்தை வைத்து இருந்தார். அந்த படம் அவருக்கு கெட்ட பெயர் வாங்கித் தந்ததை உணர்ந்து கொண்ட சன்னிலியோன் கடந்த 2012ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் நடித்தார்.
ஆரம்பத்தில் சினிமாக்களில் ஐட்டம் டான்ஸ் மற்றும் கிளாமர் காட்சிகளில் வந்து அவருக்கு மற்ற மொழிகளிலும் ஏராளமான பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது தற்போது பல்வேறு படங்களில் முக்கிய மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
ஆனால் இவருக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் தமிழில் வடகறி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து சிறு இடைவெளிக்கு பிறகு தற்போது ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதனைத்தொடர்ந்து ஜீரோ, வீரமாதேவி ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் சன்னி லியோன்.
இதனால் தமிழ் சினிமாவில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தற்போது இருக்கின்றனர். ஒருபக்கம் படங்களில் நடந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் தனது கிளாமர் காட்டி சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை அள்ளிவீசி அசத்துகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சன்னி லியோன் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் உலா வருகிறது.
அதன்படி பார்க்கையில் நடிகை சன்னி லியோன் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 100 கோடி இருக்கும் என தெரியவருகிறது. சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து பத்து வருடங்களே ஆன நிலையில் 100 கோடியைக் குவித்து வைத்திருப்பது மிக பெரிய ஒரு விஷயம் எனக் கூறி ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்