திரையுலகில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வரும் ஒரு நடிகர் என்றால் அது நடிகர் கமலஹாசன் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ்மொழியில் பல்வேறு திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவரை உலகநாயகன் கமலஹாசன் என ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்சமயம் விக்ரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படமானது ஜூன் மாதம் மூன்றாம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளியாகும் என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் டிரைலர் ஆனது வருகின்ற மே மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என கூறியது மட்டுமின்றி அதனுடன் இரண்டு பாடல்களும் வெளியாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
என்னதான் வயது முதிர்ந்தாலும் இன்றுவரை சினிமாவிற்கு கமலஹாசன் ஓய்வு கொடுத்தது கிடையாது.நடிகர் கமலுக்கு இரண்டு மகள்கள் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டுமில்லாமல் அவர்கள் கூட சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் நமது நடிகர் சமீபத்தில் அரசியலில் மிக தீவிரமாக இறங்கி மக்களுக்கு தொண்டு செய்யலாம் என எதிர்பார்த்த நிலையில் அவர் ஏமாற்றத்தை கண்டார். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகர் கமலஹாசனின் முழு சொத்து மதிப்பு குறித்து செய்திகள் வெளியாகி உள்ளது.
விஜய் அஜித் போன்ற பல நடிகர்களும் 100 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கும் நிலையில் கமலஹாசன் 177 கோடி சொத்து மதிப்பை வைத்துள்ளார்.இவ்வாறு வெளிவந்த தகவலை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.