90 காலகட்டங்களில் இருந்து தற்பொழுது வரையிலும் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் காமெடியனாகவும் ஹீரோவாகவும் நடித்து மக்களை மகிழ்வித்து வருபவர் வைகை புயல் வடிவேலு. ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசினிலே என்ற படத்தில் காமெடியனாக அறிமுகமானார் வடிவேலு.
அதன்பின் கமல், ரஜினி, சத்யராஜ், பிரபு, சரத்குமார், அஜித், விஜய் போன்ற டாப் நடிகர்களின் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டையும் படிப்படியாக உயர்த்திக்கொண்டு தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத நபராக விஸ்வரூபம் எடுத்தார் வடிவேலு. இப்படி சிறப்பாக ஓடி கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நீங்கள் காமெடி கலந்த படங்களில் ஹீரோவாக நடித்தால் நல்ல வசூல் வேட்டை நடத்துவீர்கள்.
எனக் கூறியதை அடுத்து அதற்கிணங்க இவரும் இருபத்தி மூன்றாம் புலிகேசி, தெனாலி போன்ற பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். எதிர்பார்க்காத அளவிற்கு அந்த படங்கள் வசூல் வேட்டை நடத்தியது வடிவேலுவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றது. இப்படி பயந்து கொண்டிருந்த இவர் 24ம் புலிகேசி இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பாளர் ஷங்கர் முடிவெடுத்தார்.
ஆனால் வடிவேலுகும் சங்கருக்கும் இடையே சிறு கருத்து வேறுபாடு நிலவியதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் இனி வடிவேலுவை வைத்து படம் பண்ண கூடாது என ஒரு அதிரடி உத்தரவு போட்டது இதனையடுத்து வடிவேலு நான்கு வருடங்கள் தமிழ் சினிமாவில் நடிக்காமல் போனார் ஒரு வழியாக லைக்கா நிறுவனம் பல இடையூறுகளை தாண்டி வடிவேலுவை அந்த பிரச்சினைகளிலிருந்து தூக்கியது வெளியே வந்த வடிவேலு தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் முதலில் லைக்கா நிறுவனத்துடன் கை கொடுத்து 5 படங்களில் நடிக்கிறார். சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் அதனைத் தொடர்ந்து பல்வேறு டாப் நடிகர்கள் உடன் காமெடியனாகவும் மற்றும் இவர் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் உலா வருகிறது அதாவது நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு சுமார் 180 கோடி இருக்கும் என தகவல்கள் வெளிவருகின்றன.