தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போதும் சிறப்பான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். சினிமா உலகில் 40 ஆண்டுகளாக நடித்து வரும் ரஜினி தான் இருக்கும் வரை தன்னை யாராலும் முந்த முடியாது என்பது போல..
வளர்ந்து வரும் நடிகர்களுக்கு இணையாக இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த தீபாவளி அன்று கூட ரஜினி அண்ணாத்த திரைப்படம் வெளியாகியது. பல வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிராமத்து கதையை மையமாக வைத்து உருவானது.
இந்தப் படத்தில் நடித்திருந்ததால் இந்த படத்திற்கான ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. அதற்கு ஏற்றார் போல படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் வேட்டை மட்டும் குறைந்தபாடில்லை. இதுவரை அண்ணாத்த திரைப்படம் 150 கோடிக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது.
வெகுவிரைவிலேயே 300 கோடியை அண்ணாத்த படம் தொடடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி சினிமாவில் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியை குவிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சம்பாதித்த சொத்து மதிப்பு பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து வருவதால் அவருடன் மிகப்பெரிய ஒரு தொகை. இருக்கும் என்பது நாம் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் அதுபோல தற்போது ரஜினியின் சொத்து மதிப்பு சுமார் 400 கோடி இருக்கும் என தெரிய வருகிறது ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் அல்ல..