திறமை இருப்பவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் ஆட்சி செய்ய முடியும் அந்த வகையில் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தனது திறமையை தெலுங்கு பக்கம் அதிகம் காட்டி ஹிட் கொடுத்ததால் தற்பொழுது அங்கு செல்ல பிள்ளையாக மாறி உள்ளார் மேலும் தற்போது டாப் நடிகர்களுடன் உன் கை கோர்த்து வலம் வருகிறார்.
இதுபோலவே மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன அந்த வகையில் தமிழில் இவர் நடிகர் கார்த்தியுடன் கைகோர்த்த சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் மேலும் தமிழ் நடிக்க ராஷ்மிகா மந்தனா அதிக ஆர்வமாக இருக்கிறார்.
இருப்பினும் நல்ல கதைகளை தன்னை உயர்த்தும் என்பதை சரியாக புரிந்து கொண்டு அதற்காக காத்துக்கொண்டு இருக்கிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது இவர் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்து “புஷ்பா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் வில்லனாக பகத் பாசில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் இருந்து அண்மையில் கூட சாமி சாமி என்ற பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சமீபகாலமாக உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகைகளின் சொத்து மதிப்பு குறித்து நாம் பார்த்து வருகிறோம் அதன்படி பார்கையில் நடிகை ரஷ்மிகா மந்தனா வின் முழு சொத்து மதிப்பு மட்டும் சுமார் 29 கோடி என தெரியவந்துள்ளது.