பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வெளியே வந்த தகவல்.

ramya-pandian
ramya-pandian

தமிழில் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்கள் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த திரைப்படங்கள் மூலம் இவர் வெள்ளி திரையில் அறிமுகமாகி இருந்தாலும் இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களை பெரிதும் அவரால் கவர முடியவில்லை.

அதனால் இவர் ரசிகர்களை கவர கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். இதன் மூலம் இவர் ஓர் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்தார் பின்பு இவருக்கு விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கன்டஸ்டன்ட் ஆக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி சிறப்பாக சமையல் செய்து இந்த நிகழ்ச்சியில் பைனல்ஸ் வரை சென்றுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் மற்றும் புகழ் காம்போ மக்களிடையே நல்ல ரீச் அடைந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரம்யா பாண்டியன் மக்களிடையே பிரபலம்  அடைந்தார் மற்றும் இவருக்கு பல ரசிகர்கள் கூட்டமே உருவாகின.

பின்பு இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு   பைனல்ஸ் வரை சென்றுள்ளார் இப்படி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் சிறப்பாக பிரபலம் அடைந்ததன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதில் ஒன்று தான் சூர்யா தயாரிப்பில் OTT தளத்தில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் தற்போது இடும்பன்காரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில்  இவர் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகை ரம்யா பாண்டியனின் முழு சொத்து மதிப்பு ரூபாய் 10 கோடியாம் என தகவல் வெளியாகியுள்ளது.