தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் சந்தானத்தின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

poonam-bajwa
poonam-bajwa

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தது மட்டுமில்லாமல் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் முதன்முதலாக தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார் இதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு சந்தானத்திற்கு கிடைத்தது.

ஆனால் குறிப்பிட்ட சில நாட்களில் நடிகர் சந்தானம் நான் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என முடிவு செய்து கதாநாயகனாக மட்டுமே நடித்து வந்தார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான பல படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி  டிக்கிலோனா மற்றும் சபாபதி ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் தற்போது சந்தானம் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படம் ஒரு ரீமேக் திரைப்படமாம். இது ஒரு பக்கமிருக்க சினிமாவில் உள்ள பல்வேறு திரையுலக நட்சத்திரங்களின் மதிப்புகள் நாளுக்கு நாள் வெளி வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் நடிகர் சந்தானத்தின் முழு சொத்து மதிப்பு பற்றிய ஒரு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்தவகையில் சந்தானத்தின் முழு சொத்து மதிப்பு மட்டும் சுமார் 80 கோடி என  தெரியவந்துள்ளது.