Vadivelu total net worth : தமிழ் சினிமா உலகில் இன்று எத்தனையோ காமெடி நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு மக்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்திருப்பவர் வைகை புயல் வடிவேலு. இவர் தன்னுடைய தன்னுடைய பேச்சு மற்றும் உடல் அசைவின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
இப்படிப்பட்ட வடிவேலு ஹீரோவாகவும் வெற்றி கண்டார் இந்திரலோகத்தில் நா அழகப்பன், இம்சைஅரசன் 23ஆம் புலிகேசி, தெனாலிராமன், எலி, டிடி ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக கூட மாமன்னன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கைதட்டல் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து வடிவேல் சந்திரமுகி 2 படத்தில் பெயிண்டர் கோபால்வாகவும் நடித்து வருகிறார் இந்த நிலையில் தனது 63 வது பிறந்த நாளை சென்னையில் உள்ள தனது வீட்டில் கொண்டாடினார். அவருடைய பிறந்தநாளைக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு குறித்து நமக்கு தகவல்களை கிடைத்து உள்ளது அதன்படி பார்க்கையில் சென்னையில் மட்டும் இரண்டு வீடு உள்ளது இந்த வீட்டின் மதிப்பு மட்டுமே இரண்டு கோடி என சொல்லப்படுகிறது இரண்டு ஆடி கார்கள், பிஎம்டபிள்யூ, டொயோட்டா என நான்கு சொகுசுதாரர்களையும் வைத்திருக்கிறார்.
மதுரையில் வடிவேலுவிற்கு ஒரு வீடு 20 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது ஆக மொத்தம் நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு சுமார் 130 கோடி இருக்கும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஒரு காமெடியனுக்கு மட்டுமே இவ்வளவு சொத்து மதிப்பு என்றால் ஒரு நடிகர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் எனக் கூறி வாய்ப்பு பிளந்து வருகின்றனர்