சூப்பர் ஸ்டார் ரஜினி பயன்படுத்தும் கார், வீட்டின் புகைப்படம்.. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

rajini
rajini

தமிழ் திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையும் கமர்ஷியல் படங்களில் நடிப்பதால் அந்த படங்கள் ஒவ்வொன்றும் வெற்றியை பதிவு செய்கின்றன கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம்..

கூட கலவையான  விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் வசூலில் பட்டையை கிளப்பியது. இப்பொழுது இளம் இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி அமைத்து ரஜினி ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருகிறது.

ரஜினி உடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் படத்தில் ரஜினி ஜெயில் உயர் அதிகாரியாக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.. மற்றபடி இந்த படத்தில் இருந்து வேறு எந்த தகவல்களும் வெளிவரவில்லை.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் “லால் சலாம்” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக 7 நாள் கால்ஷீட் ரஜினி ஒதுக்கியிருக்கிறாராம்..  அந்த படத்தில் நடிக்க ரஜினி சுமார் 25 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் ரஜினி பற்றிய ஒரு செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது வேறு எதுவும் இல்லை.. ரஜினியின் சொத்து மதிப்பு தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல்வேறு இடங்களில் சொத்து மதிப்பு இருக்கிறது. சென்னயில் உள்ள போயஸ் கார்டனில் மிகப்பெரிய வீடு மற்றும் கார் சொல்லிக்கொண்டே போகலாம் மொத்தமாக ரஜினியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 410 கோடியில் இருந்து 450 கோடி வரை இருக்கும் என சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உலவுகிறது ஆனால் இது குறித்து இன்னும் உண்மையான தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

rajini
rajini