காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை அள்ளியுள்ள மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? உச்சகட்ட சந்தோஷத்தில் படக்குழு.

kaathu vaagula rendu kadhal
kaathu vaagula rendu kadhal

தமிழ் சினிமா உலகில் காமெடி மற்றும் காதல் கலந்த படங்களை கொடுத்து  வந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர் இப்பொழுது நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர்களை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை உருவாக்கி இருந்தார்.

இந்த படம் பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து அண்மையில் படம் ரிலீசானது. படம் எதிர்பார்த்ததை போல சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது தற்போது பொதுமக்களும் திரையரங்கை நாடி படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் காதல், ரொமான்டிக் கலந்த படமாக இருப்பதால் படம் தமிழில் தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நயன்தாரா, சமந்தா விஜய், சேதுபதி கேரியரில் மிக முக்கியமான படமாக  அமைய இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

படத்திற்கான வசூல் வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் 35 கோடிக்கு மேல் ஆகும் தமிழகத்தில் 25 கோடிக்கு மேல் ஆகும் நேற்று முன்தினம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய வசூடன்  சேர்த்து பார்க்கையில் தமிழகத்தில் மட்டுமே காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சுமார் 27 கோடி மொத்தமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாராவின் நடிப்பு போற்றப்படும் போதையில் இருந்தாலும் அனிருத்தின் இசையில் படத்திற்கு இன்னும் பிளாஸ் ஸாக அமைந்துள்ளதால் படம் வரும் நாட்களில் சிறப்பாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறதாம்.