“நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை அள்ளி உள்ள மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..

nenchikku nithi
nenchikku nithi

அண்மை காலமாக சமூக அக்கரை உள்ள திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அசத்துகிறது அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி இந்த படம் ஆர்டிகல் 15 திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

ஏற்கனவே ஹிந்தியில் இந்த படம்  சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தமிழிலும் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பு பெற்று வசூலில் அடித்து நொறுக்கி வருகிறது. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்து இளவரசு, சுரேஷ் சக்ரவர்த்தி, தன்யா ரவிச்சந்திரன் ஆர் அர்ஜுன், ஆர்ஜ் ரமேஷ் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் முழுக்க முழுக்க  சமூக அக்கறை உள்ள கருத்துக்களை எடுத்துரைக்கும் திரைப்படமாக இருந்து வந்துள்ளதால் அனைத்து தரப்பட்ட மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று தற்போது வசூல் சாதனை படைத்து வருகிறது. நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தொடக்கத்திலேயே வசூல் வேட்டை நடத்தியது தற்போது இரண்டு வாரங்கள் முடிந்த பிறகும் படத்தை  கண்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து எந்த ஒரு டாப் நடிகரின் திரைப்படமும் வெளியாகாமல் இருப்பதால் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி புதிய சாதனை படைக்கும் என தெரியவருகிறது இதுவரை நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 கோடியை அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது.

வருகின்ற நாட்களிலும் சில கோடிகளை அள்ளி அசத்தும் என கூறப்படுகிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் வெளிவரும் அதுவே அவரின் கடைசிப் படமாக இருக்கும் எனவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.