இளம் இயக்குனர்கள் அண்மை காலமாக சிறந்த படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் இந்த ஆண்டு இயக்கி நடித்த திரைப்படம் லவ் டுடே. இவர் இதற்கு முன்பாக காஜல் அகர்வால், ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர்களை வைத்து கோமாளி என்னும் படத்தை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி உள்ளார் இது இவருக்கு இரண்டாவது திரைப்படம் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்தார் அவருடன் இணைந்து ராதிகா சரத்குமார், ரவீனா ரவி, இவானா, யோகி பாபு, சத்யராஜ் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.
இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்தது. அதே சமயம் இந்த காலகட்டத்திற்கு தேவையான சில கருத்துக்களையும் இந்த படம் எடுத்துரைத்ததால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போனது. மேலும் பலரும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனத்தையே கொடுத்ததால் படம் பட்டித் தொட்டி எங்கும் பரவியது.
இப்படி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க மறுபக்கம் நல்ல வசூல் வேட்டையும் நடத்துகிறது. முதல் நாளே 4 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அடுத்தடுத்த நாட்களிலும் இந்த படத்தின் வசூல் தாறுமாறாக எகுறியது தற்போது வரையில் மட்டுமே இந்த திரைப்படம் 50 கோடி வசூல் செய்து இருக்கிறதாம்..
இதனால் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார் மேலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த படம் மிகப்பெரிய ஒரு ட்ரீட்டாக இருக்கிறதாம் ஏனென்றால் இவ்வளவு பெரிய வசூல் ஆளும் என அந்த நிறுவனமே நினைக்கவில்லையாம் தற்பொழுது நல்ல வசூல் மழை பெய்வதால் அந்த நிறுவனம் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறதாம்..