ஒரு படம் வெற்றி பெற முக்கியம் கதை தான் அது சிறப்பாக அமைந்து விட்டால் படம் ஆட்டோமேட்டிக்காக வெற்றியை ருசிக்கும் ஹீரோ, ஹீரோயின்கள் கூட தேவையில்லை என பலர் சொல்வார்கள் தற்போது அது நடந்தே உள்ளது. அந்த வகையில் கோமாளி படத்தை இயக்கி வெற்றிகண்ட பிரதீப் ரங்கநாதன். அண்மையில் இயக்கி, நடித்த திரைப்படம் லவ் டுடே..
இந்த படம் முழுக்க முழுக்க காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு திரைப்படம் ஆக இருந்ததால் அனைவருக்கும் ரொம்ப பிடித்து போனது மேலும் இந்த காலகட்டத்திற்கு தேவையான பல மெசேஜ்கள் இந்த படம் எடுத்துரைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார்..
மற்றும் சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்றதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. முதல் நாளே இந்த திரைப்படம் 4 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
அடுத்தடுத்த நாட்களிலும் இந்த படத்தின் வசூல் ஜோராக இருந்து வந்துள்ளன இப்படி இருக்கின்ற நிலையில் படம் வெளிவந்த ஐந்து நாட்கள் முடிந்த நிலையில் இதுவரை எவ்வளவு வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்க லவ் டுடே திரைப்படம்.
ஒட்டுமொத்தமாக ஐந்து நாள் முடிவில் மட்டுமே 20 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது இதனால் பட குழுமம் சரி, பிரதீப் ரங்கநாதனும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.