ரஜினியின் துள்ளலான நடிப்பில் வெளிவந்த “முத்து” படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

muthu-
muthu-

சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பல வருடங்களாக தக்க வைத்துக் கொண்டு ஓடுபவர் ரஜினி. இவர் தற்போது இளம் இயக்குனர் நெல்சன் உடன் முதல் முறையாக “ஜெயிலர்” திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். படம் முழுக்க முழுக்க ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு மாஸ் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்க மறுபக்கம் ரஜினியை பற்றி பழைய மற்றும் புதிய செய்திகள் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அப்படி ஒரு செய்தியை தான் நாம் பார்க்க இருக்கிறோம் 1995 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் முத்து. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, செந்தில், ராதா ரவி, சரத், பாபு, வடிவேலு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

படம் ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக ஓடியது. அதன் காரணமாக முத்து திரைப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது.  கடைசியாக உலகம் முழுவதும் முத்து திரைப்படம்..

44 கோடிக்கு மேல் வசூல் செய்ததாம்.. இந்தியாவில் மட்டும் 24 கோடியும், வெளி நாடுகளில் 20 கோடியும் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 90களில் இப்படி ஒரு மிகப்பெரிய வசூல் சாதனையை முத்து திரைப்படத்தின் மூலம் ரஜினி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.