ரஜினியின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த “பாட்ஷா” படம்.. ஒட்டு மொத்தமாக அள்ளிய கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

rajini
rajini

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தனது திரைப்படத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் அதிகம் வெற்றி படங்களை தான் கொடுத்திருக்கிறார் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க இளம் இயக்குனர் நெல்சன் உடன் கூட்டணி அமைத்து ஜெயிலர்..

திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படி இருக்க ரஜினி பற்றிய பழைய செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாட்ஷா.

படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது அமைந்தது. மேலும் இந்த படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து நடித்த ரகுவரன், ஆனந்தராஜ், நக்மா, ஜனகராஜ், கேசவன், விஜயகுமார்..

சரண்ராஜ், யுவராணி, சத்யப்ரியா மற்றும் பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தது இந்த படத்திற்கு இன்னும் பக்க பலமாக இருந்தது அதன் காரணமாகவோ என்னவோ பாட்ஷா திரைப்படம் அனைத்து இடங்களிலும் வசூலை வாரி குவித்தது. இப்படி இருக்கின்ற நிலையில் பாட்ஷா திரைப்படம் 90 காலகட்டத்தில் வெளிவந்து எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து நிலவாரம் கிடைத்திருக்கிறது.

அதன்படி பார்க்கையில் ரஜினியின் பாட்ஷா திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 37.09 கோடி வசூல் செய்ததாம்.. இந்தியாவில் மட்டும் 30.8 கோடியும் வெளிநாட்டில் 6.29 கோடியும்  கலெக்ஷன் பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.