தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாகி பின் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் பார்த்திபன். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் ஆனால் பார்த்திபனுக்கு இயக்குனராக ஆக வேண்டும் என்ற எண்ணமும் இருந்ததாம். அதனால் அவரே பல படங்களை இயக்கியும் நடித்துள்ளார்.
மேலும் அவரது படங்கள் மற்ற இயக்குனர்களின் படங்களை காட்டிலும் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனாலேயே பல சிறப்பான படங்களை எடுத்து தேசிய விருதும் பெற்றார். அந்த வகையில் சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த ஜூலை 15ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.
இந்த படம் தமிழ் சினிமாவில் முதல் முதலில் எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் நான்லினியர் படமாக வெளிவந்துள்ளது. மேலும் இயக்குனர் பார்த்திபனுக்கு குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படங்களை கொடுக்க வேண்டும் என்று தான் ஆசை இருந்தாலும் சில காரணங்களால் இந்த படம் 20 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது என கூறப்படுகிறது. அதனால் இரவில் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வந்தது.
அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் பார்த்திபனுடன் இணைந்து பிரியங்கா ரூத், ரேகா நாயர், பிரகிடா, ரோபோ சங்கர், வரலட்சுமி சரத்குமார் போன்ற பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். அதனால் படம் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசுலை அள்ளி வருகிறது.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட இயக்குனர் பார்த்திபனை சந்தித்து இரவின் நிழல் படம் சிறப்பாக இருக்கிறது என பாராட்டினார். இந்த நிலையில் இரவின் நிழல் திரைப்படம் வெளியாகி 14 நாட்கள் முடிந்துள்ளன. இதுவரை இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 22.93 கோடி வரை வசூல் செய்து உள்ளாக கூறப்படுகிறது.