தனுஷ் நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நேற்று திரையரங்கில் வெளியான படம் திருச்சிற்றம்பலம். இதற்கு முன் தனுஷின் ஜகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின. அந்த படங்கள் சுமாரான வரவேற்பு பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தினை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தை இயக்குனர் ஜவகர் மித்ரன் இயக்கி உள்ளார் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானிசங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா போன்ற பல நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் வெளியீட்டுக்கு முன்பே திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது அப்போது படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே ட்ரெண்ட் ஆகியது. நேற்று வெளியான இந்த படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றன. மேலும் தனுஷ் ரசிகர்கள் திரையரங்கில் ஆரவாரத்துடன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
திருச்சிற்றம்பலம் படத்தை முதல் நாள் ஷோவை பார்க்க படத்தில் நடித்த நடிகர் நடிகைகளான தனுஷ், ராசி கண்ணா போன்ற சிலரும் ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து படத்தை கண்டுகளித்தனர். இந்த நிலையில் நேற்று வெளியான திருச்சிற்றம்பலம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்ற நிலையில் முதல் நாள் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி பார்க்கையில் திருச்சிற்றம்பலம் படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் சுமார் 5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த திருச்சிற்றம்பலம் பட குழு மற்றும் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சிகள் இருக்கின்றன. அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.