தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்துவது வழக்கம் அந்த வகையில் நடிப்பிற்கு பெயர் போன சிவாஜி அவர்களை தொடர்ந்து கமல் இப்போது எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பவர் நடிகர் விக்ரம் தான்.
அதை அவர் பல படங்களில் நிரூபித்துள்ளார் குறிப்பாக சேது, பிதாமகன், ஐ, போன்ற படங்களில் நடிகர் விக்ரம் மிரட்டியிருப்பார் இப்பொழுது கூட கோப்ரா திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பல கெட்டப்புகளில் கூட தனது திறமையை வெளிக்காட்டி உள்ளதாக கூறப்படுகிறது நிச்சயம் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.
படமும் வெகு விரைவிலேயே வெளியான ரெடியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் கையில் பொன்னியின் செல்வன் மற்றும் பெயரிடாத ஓரிரு திரைப்படங்களில் நடித்தும் கமிட்டாகியுள்ளார் அதில் ஒன்றாக தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களை வைத்து சிறப்பான படங்களை கொடுத்து அசத்தும்.
பா. ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தைத் தொடர்ந்து இப்போது முதன்முறையாக விக்ரமுடன் கைகோர்க்கும் உள்ளார். விக்ரமின் 61 திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கவுள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க விளையாட்டு சம்பந்தமாக படமாக உருவாகும் என கூறப்படுகிறது.
இரண்டு டாப் நட்சத்திரங்கள் ஒரு படத்தில் இணையும் போது அந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பி விடும் அந்த வகையில் விக்ரமின் 61 படத்தை ரசிகர்கள் வேறு அளவுகளில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படத்திற்கு “மைதானம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.