நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமா உலகில் ஹீரோ வில்லனாக நடித்து அசத்தி வருகிறார் இவருக்கு தமிழை தாண்டி தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது இதனால் அவரது மார்க்கெட் உயர்ந்துள்ளதோடு மட்டுமல்லாமல் இவருக்கு சம்பளமும் அதிகமாக உள்ளது.
விஜய்சேதுபதி கடைசியாக நடித்த விக்ரம் திரைப்படம் சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் ஹிந்தி படங்களிலும்..
பிறமொழி படங்களிலும் விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. விஜய் சேதுபதியின் 46 வது திரைப்படத்தை பொண்ராம் இயக்கி வருகிறார். இவர் இதுவரை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இவர் கடைசியாக சீம ராஜா படத்தை எடுத்தார்.
அந்த படம் பெரிய தோல்வி படமாக அமைந்தது அதனைத் தொடர்ந்து இப்பொழுது விஜய் சேதுபதி உடன் கைகோர்த்து உள்ளார். விஜய் சேதுபதியும் இயக்குனர் பொண்ராமும் இணைந்துள்ள படத்திற்கு தற்போது “DSP” என டைட்டில் வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீசாக நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
இந்த படம் வருகின்ற நவம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது இந்த படத்தின் டிரைலர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவது குறித்து தகவல் வெகு விரைவில் வெளிவரும் எனவும் சொல்லப்படுகிறது இந்த படம் நிச்சயம் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.