மீண்டும் வெளியாகும் மாஸ்டர் படத்தின் டீஸர் அதுவும் எந்த மொழியில் தெரியுமா.!

vijay
vijay

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு மாலை 6 மணிஅளவில் வெளியிடப்பட்டது வெளிவந்த நாளில் இருந்தே யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்தது.

மேலும் விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது இந்த படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகயுள்ளது.

மேலும் மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் வரும் டிசம்பர் 17-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிப்புகள் வெளிவந்துள்ளது மேலும் தெலுங்கில் உள்ள விஜய்ரசிகர்களுக்கு ஒரே குஷியாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி இந்த மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது மேலும் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என பட குழுவினர்கள் எதிர்பார்கிறார்கள்.