சினிமா உலகில் ஒரு படம் மாபெரும் வெற்றி பெற்று விட்டால் அதை மாற்ற மொழியில் ரீமேக் செய்யப்படுவது வழக்கமாக இருக்கிறது அந்த வகையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் “லூசிஃபர்” இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது இந்த திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார் ஹீரோவாக சிரஞ்சீவி நடிக்கிறார் இந்த படத்தில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நடித்து வருகிறார்.
சிரஞ்சீவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த கதாபாத்திரத்தில் நயன்தாராவை கமிட் செய்து தற்போது நடிக்க வைக்கின்றனர்.
நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் சத்ய தேவ் ஆனால் முதலில் அவர் ஒரு பெரிய பிரபலம் கிடையாது என்பதால் அவரை மாற்ற சொல்லி இருக்கிறார் நயன்தாரா ஆனால் படக்குழு அவர் சிறப்பாக நடிப்பார் என்ற காரணத்தினால் அவரை கமிட் செய்து உள்ளது மேலும் நயன்தாரா தற்போது அவருடன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவுலகில் டாப் ஹீரோயினாக வலம் வந்த நயன்தாரா இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆனால் இவரது காட்சிகள் பெருமளவு இல்லை என்றாலும் இவர் வரும் காட்சிகள் சிறப்பான காட்சிகள் என்பதால் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இந்த திரைப்படத்திற்காக சுமார் நயன்தாரா 4 கோடி சம்பளம் கேட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தெலுங்கு சினிமாவில் இதுவரை ஒரு நடிகையை இவ்வளவு தொகை வாங்கியது கிடையாது ஆனால் நயன்தாரா என்பதால் அதை கொடுக்க படக்குழு தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உடன் நயன்தாரா இரண்டாவது முறையாக இணைகிறார் இதற்கு முன்பாக சாயிரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இவர்கள் இருவரும் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.