நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிரபுதேவா – வடிவேலு படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

vadivelu-and-prabhudeva
vadivelu-and-prabhudeva

சினிமா துறையில் தன்னை பன்முகத் தன்மை கொண்டவராக மாற்றி கொண்டார் நடிகர் பிரபுதேவா முதலில் இவர் நடன இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்து இருந்தாலும் அதன் பின் தனது திறமை மீது நம்பிக்கை வைத்து ஹீரோவாகவும் இயக்குனராகவும் தன்னை மாற்றிக்கொண்டார்.

இவர் தொட்ட அனைத்திலும் வெற்றியை கண்டவராக தற்போது மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடன இயக்குனராக பல்வேறு  சில முக்கிய நடிகர்கள் படங்களில் பணியாற்றினார். படத்தில் ஹீரோவாக நடித்து வெற்றிகளைக் குவித்து ஓடிக் கொண்டிருந்த நடிகர் பிரபுதேவா நல்லதொரு இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தனது ரூட்டை மாற்றி இயக்குனர்.

அவதாரம் எடுத்தார். தளபதி விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு ஆகிய திரைப்படங்களை எடுத்து இருந்தார் அதனைத் தொடர்ந்து இந்தி நடிகர் சல்மான் கான் போன்ற பிரபலங்களை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டு பின்பு இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழிலும் நடிக்க வந்தார்.

அந்தவகையில் நடிகர் பிரபுதேவா தமிழில் பொன்மாணிக்கவேல், தேள், தேவி 1, 2 ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது இப்போதுகூட பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி ஓடிக் கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் தற்பொழுது வடிவேலுவுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரபுதேவா கைகோர்த்துள்ளார்.

வடிவேல் நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார் அந்த பாடலுக்கு மட்டுமே சுமார் ஒரு கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வடிவேலுவும் பிரபுதேவாவும் காதலன் திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது தான் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.