தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி தற்பொழுது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த முதல் பாகம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்பொழுது இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட அதிகம் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.
பல சினிமா பிரபலங்களும் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க முயற்சித்து கைவிடப்பட்டு தற்பொழுது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தனது அசாத்திய திறமை மூலம் இந்த இரண்டு பாகங்களையும் எடுத்து முடித்துள்ளார்.
இன்று வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என ரசிகர்களும் எதிர்பார்த்து வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள்,நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
இந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் இதுதான் சமூக வலைதளங்களில் அதிகமாக தற்பொழுது வைரலாகி வருகிறதாம்.அதாவது இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் கார்த்தி ரூ.5.5 கோடி, பிரகாஷ் ராஜ் ரூ.1.5 கோடி ஐஸ்வர்யா லட்சுமி ரூ.1.5 கோடி,த்ரிஷா ரூ.5 கோடி, ஜெயம் ரவி ரூ.8 கோடி,ஐஸ்வர்யா ராய் ரூ.10 கோடி.
விக்ரம் ரூ.12 கோடி ஜெயராம் ரூ.1கோடி,பிரபு ரூ.1.5 கோடி என இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பல ரசிகர்களும் இந்த தகவல் தான் உண்மையாக இருக்க வேண்டும் என கமெண்ட் பதிவு செய்தும் ஒரு சில ரசிகர்கள் வருகிறார்கள்.