சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் இளம் வயதிலேயே ஹீரோவாக நடிக்கத் தொடங்கியவர் அருண்விஜய். ஆரம்ப காலகட்டத்தில் கதைகளை சரியாக தேர்ந்தெடுத்து நடிக்காததால் தொடர் தோல்விகளை கண்டு ஒரு கட்டத்தில் இருக்கின்ற இடம் தெரியாமல் போனார். அவ்வப்போது தலை காட்டி நடித்து இருந்தாலும்.
அந்த படங்கள் வெற்றியைப் பெறாமல் போன இப்படி இருந்த நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் திரைப்படத்தின் கம்பேக் கொடுத்தாராம் இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடிப்பில் மிரட்டி இருந்தார். அதன்பின் இவருக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தன.
அந்தவகையில் குற்றம் 18, தடம் ஆகிய படங்கள் இவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது குறிப்பாக தடம் திரைப்படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செம்மையாக எடுத்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகிழ்திருமேனி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு திரையரங்கில் கோலாகலமாக வெளியாகி வெற்றி பெற்றது தடம் படம்.
அந்த அளவிற்கு இந்த படத்தில் திரில்லர், சஸ்பென்ஸ், காதல், ரொமான்ஸ் என அனைத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் இந்த படத்தில் அவரது நடிப்பு வியக்க வைக்கும் வகையில் இருந்தது.
இந்தப் படத்தில் அருண் விஜய் உடன் இணைந்தும் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், யோகி பாபு,வித்யா பிரதீப் மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தினார் இந்த திரைப்படம் அருண் விஜய் கேரியரில் மிக முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் அருண் விஜய் சுமார் 75 லட்சம் சம்பளமாக வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.