திரை உலகில் ஒரு நடிகை ஹீரோயின் என்ற அந்தஸ்தைப் பெற்ற பிறகு சினிமா உலகில் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க ஆசை படுவார்கள் ஆனால் இதிலிருந்து தன்னை முற்றுமாக மாற்றிக் கொண்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஒரு பக்கம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க மறுபக்கம் டாப் ஹீரோ படங்களில் தங்கையாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.
இருப்பினும் அவரது மார்க்கெட் எந்த பாதகமும் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷின் சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் காரணமாக தமிழ் தாண்டி தெலுங்கு படத்திலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இப்படி சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது திறமையை காட்டுவதால் ரசிகர்களும் இவருக்கு ஏகபோகமாக இருக்கின்றனர்.
இதன் காரணத்தினால் சினிமாவையும் தாண்டி அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுக்காக புகைப்படங்களையும் அள்ளி வீசி வருகிறார். எதை தொட்டாலும் அதில் வெற்றி பெறும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கூட இவரது கையில் நிறைய படங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் இவர் தனுஷ் நடிப்பில் உருவான வடசென்னை.
திரை படத்தில் ஹீரோயின்னாக நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி பார்வையில் வடசென்னை திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சுமார் ஐம்பது லட்சம் சம்பளம் வாங்கி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சினிமா உலகில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தாலும் தனது மார்க்கெட் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சம்பளத்தை மட்டும் அதிகமாக உயர்த்திக்கொள்ளாமல் வலம் வருவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.