லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்க போகும் ஆதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அவரே கேட்டு அதிர்ச்சியானார்.! ஹீரோவாக நடிக்கும் போது கூட இவ்வளவு சம்பளம் வாங்கலையாம்.

lingusamy and aathi
lingusamy and aathi

லிங்குசாமி சினிமா உலகில் சிறந்த படைப்புகளை கொடுத்த இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இதுவரை இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் வெற்றியை ருசித்து இருந்தாலும் கடைசியில் இவர் இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி-2 பெருமளவு எதிர்பார்ப்பு இருந்தாலும் படம் வெளிவந்து தோல்வியைத் தழுவியது.

இருப்பினும் அவர் இயக்கும் அடுத்த படத்திற்கு நல்ல வரவேற்பு தற்போது இருந்து வருகிறது அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் பொத்தினேனி வைத்து ஒரு புதிய படத்தை  எடுக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை க்ரீதி செட்டி என்பவர் கதாநாயகியாக இறங்குகிறார் மேலும் இந்த படத்தில் வில்லனாக முதலில் நடிக்க வைக்க மாதவன் மற்றும் ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் லிங்குசாமி. ஆனால் இவர்கள் இருவருமே மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை கைவிட்டனர்.

அடுத்ததாக தமிழ் சினிமாவில் சிறப்பான படங்களில் நடித்த  நடிகர் ஆதி தற்போது தெலுங்கு சினிமாவின் ஹீரோ வில்லன் போன்ற ரோல்களில் மிரட்டுகிறார் அதனால் அவரை அணுகி உள்ளார் லிங்குசாமி படத்தின் கதையை கேட்டுவிட்டு உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் வில்லனாக நடிக்கும் ஆதி தற்போது நான்கு கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

ஹீரோவாக நடித்த ஆதிக்கு இதுவரை அதிக பட்சமாக  50 லட்சம் தான் சம்பளமாக வாங்கினார் ஆனால் வில்லன் என்ற ரோலுக்கு மாறியவுடன் அவரது மார்க்கெட் வேற லெவெலில் உச்சத்தைத் தொட்டு விடலாம்.

இதனால் நடிகர் ஆதியின் சந்தோஷத்தின் உச்சியில் இருந்து வருகிறார்.