நடிகை ஸ்ருதிஹாசன் இப்ப ஒரு படத்திற்கு வாங்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அசர வைக்கும் ரிப்போர்ட்.!

shruthi-haasan
shruthi-haasan

திரை உலகில் வெற்றி அடைந்த நடிகர் நடிகைகளின் வாரிசுகள் சினிமா உலகில் கால் தடம் பதித்து தற்போது அவர்களும் அசத்துகின்றனர் அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் மகள் நடிகை சுருதிஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின் படிப்படியாக தென்னிந்திய சினிமாவில் உள்ள டாப் நடிகர்கள் படங்களை கைபற்றி நடித்து உள்ளதால் தொடமுடியாத உச்சத்தை எட்டியுள்ளார்.

தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை தொடர்ந்தார் அதன்பின் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறைந்த படங்களே நடித்து அசுர வளர்ச்சியை எட்டியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஓடிக் கொண்டிருந்த இவர் நிழ வாழ்க்கையில் ஒருவர்  மீது காதல் வயப்பட்டு சில பிரச்சனைகளில் சந்தித்தார். இதனால் ஒரு குறிப்பிட்ட வருஷம் சினிமாவில் நடிக்காமல் போனார் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி தற்போது தான் தலைகாட்டினார். உடனேயே இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தது.

தெலுங்கில் இவர் கிராக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் தமிழில் இவர் நடித்துள்ள புதிய படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இருப்பினும் இவரை நம்பி பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் தான் இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் சம்பள விவரம் பற்றி ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பார்த்தால் இவர் ஒரு திரைப்படத்தில் தற்போது 6 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.