நடிகை பூஜா ஹெக்டே முதலில் மாடலிங் துறையில் இருந்து பின் சினிமா பக்கம் அடியெடுத்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்து தான் சினிமா உலகிற்கே என்ட்ரி கொடுத்தார். ஆனால் முதல் படமே இவருக்கு தோல்வி படமாக அமைந்தது.
இருப்பினும் தெலுங்கில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தார் இவர் அங்கு நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி கண்டதால் தற்போது அங்கு டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார் மேலும் பல்வேறு பட வாய்ப்புகள் மற்ற மொழிகளிலும் கிடைத்து வருகிறது அந்த வகையில் தமிழ், ஹிந்தி ஆகியவற்றிலும் ஆட்சி செய்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே .
இப்பொழுது கூட தமிழ்,தெலுங்கு பல்வேறு மொழி படங்களில் நடித்து உள்ளார். அந்த வகையில் தமிழில் தளபதி விஜயுடன் பீஸ்ட், தெலுங்கில் பிரபாஸின் உடன் ராதே ஷியாம், சிரஞ்சீவியுடன் ஒரு படம் பண்ணுகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் முதலாவதாக பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ராதே ஷியாம்.
இந்த படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து அவர் நடித்துள்ளார். இந்த படம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது படத்தின் டிரைலர் கூட வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் வெளியாக ரெடியாக இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் நடிகை பூஜா ராதே ஷியாம் திரைப்படத்திற்காக சுமார் 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.