நடிகை அனுஷ்கா பாகுபலி திரைப்படத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

anushka
anushka

தென்னிந்திய சினிமாவில் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை பெருமளவு உயர்த்தி கொண்டவர் நடிகை அனுஷ்கா. தொடர்ந்து சிறப்பாக ஓடிய நடிகை அனுஷ்கா திடீரென சோலோ படங்களிலும் நடித்து வெற்றியை காண ஆரம்பித்தார்.

அந்த படங்களில் நல்லதொரு வெற்றியை கொடுத்தாலும் ஒரு சில படங்களில் தனது  கதாபாத்திரங்களுக்காக உடல் எடையை ஏற்றியும், குறைத்தும் நடித்தார் ஒரு கட்டத்தில் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக நடிகை அனுஷ்கா உடல் எடையை தாறுமாறாக ஏற்றிய பின் அவரது உடல் எடையை குறைக்க முடியாமல் அலறினார்.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இவருக்கான ரசிகர் பட்டாளம் திறமையின் மீது நம்பிக்கை வைத்து ராஜமௌலி பாகுபலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தார். இருப்பினும் இவரது உடல் எடையை vfx போன்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒல்லியாக காட்டினர்.

பாகுபலி திரைப்படம் ஒன்று மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்து அசத்தி இருந்தார் இந்த படத்தில் இவருடன் இணைந்து ராணா டகுபதி, பிரபாஸ், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் மற்றும் பலர் டாப் நடிகர் நடிகைகள் நடித்து இருந்தனர். இந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்த அனுஷ்காவுக்கு அதன்பின் அதன்பின் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அனுஷ்கா பாகுபலி 1, 2 ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்து சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் பாகுபலி 1 திரைப்படத்திற்காக நடிகை அனுஷ்கா 3 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்த 5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.