தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து பிரம்மாண்ட படத்தை எடுத்துள்ளார் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி. இதுவரை அவர் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது இவர்களை வைத்து RRR என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் வெகு விரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது. இதுவரை படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரெய்லர் மற்றும் பாடல் ஆகியவை அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்து விட்டதால் படத்தை பார்க்க எதிர்நோக்கி இருக்கின்றனர்.
இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் இவைதவிர சமுதிரக்கனி, ஆலியா பட், அஜய் தேவ்கன் பலர் நடித்து உள்ளனர் இந்த படத்தில் ஆலியா பட் சுமார் 20 நிமிடம் தான் வந்து போவாராம் அதுக்கு மட்டுமே அவர் பல கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.
ஆமாம் RRR படத்துக்கு மட்டும் சுமார் 9 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு ஹிந்தி பிரபலமான அஜய்தேவ் கன்னும் இந்த திரைப்படத்திற்காக சுமார் 35 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு பக்கம் அறிமுகமாகிய இவர்களுக்கு ஆரம்பத்திலேயே இவ்வளவு கோடி என்பது அதிகம் என பலரும் கூறி வருகின்றனர்.
இருப்பினும் அவர்களுக்கென ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கின்றன. அதனால் இவ்வளவு சம்பளம் என்பது பெரிய விஷயம் அல்ல என கூறி வருகின்றனர். இச்செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.