நடிகர் வடிவேலு “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? மிரண்ட முன்னணி ஹீரோக்கள்.!

vadivelu
vadivelu

காமெடி என்பது ஒவ்வொருவரு நடிகரும் தனக்கென ஒரு தனித் தத்துவமாக இருந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் அந்த வகையில் கவுண்டமணி செந்தில் ஆகியவர்கள் எப்படி தனித்துவமாக இருந்ததோ அது போல இப்போதைய காலகட்டத்தில் வடிவேலின் உடல்மொழி மற்றும் அவரது டயலாக் சிறப்பாக இருப்பதால் அவரது  காமெடி இன்றும் ரசிக்கப்படுகின்றன.

மேலும்  இளம் தலைமுறை ரசிகர்கள் வடிவேலு காமெடி மற்றும் ரியாக்சன் ஆகியவற்றை சமூக வலைதள பக்கங்களில் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர் இதனால் வடிவேலு பற்றிய பேச்சு இணையதள பக்கத்தில் இருந்து கொண்டே இருக்கிறது.

90 காலகட்டங்களில் இருந்து இப்போது வரையிலும் வடிவேலு காமெடியனாக மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாமல் ஹீரோவாகவும் பல வெற்றிகளை கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்த வடிவேலு தயாரிப்பாளரும் இயக்குனருமான ஷங்கருடன்  சில பிரச்சனைகள் ஏற்படவே நான்காண்டுகள் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

ஒருவழியாக லைகா நிறுவனம் அதில் குறிப்பிட்ட இந்த பிரச்சினையை முடித்து கொடுக்கவே தற்போது நடிகர் வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார் முதலில் லைகா நிறுவனம் தயாரிக்கும் முதல் ஐந்து படங்களில் நடித்து விட்டு பின் மற்ற படங்களில் நடிப்பார் என கூறப்படுகிறது முதலில் இயக்குனர் சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் சூட்டிங் முழுவதுமாக முடித்துவிட்டு இந்த ஆண்டிற்கு உள்ளேயே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு அதிக முனைப்பு காட்டி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது அதன்படி பார்க்கையில் நடிகர் வடிவேலு இந்தத் திரைப்படத்திற்காக மட்டுமே சுமார் 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள்.