நடிகர் சூர்யா “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

etharkum thuninthavan
etharkum thuninthavan

தமிழ் சினிமா உலகில் சிறப்பாக ஜொலிக்கும் சூர்யா எப்போதும் வித்தியாசமான திரைப்படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து வெற்றி காண்பது அவரது ஸ்டைல் அந்தவகையில் அண்மை காலமாக சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து அசத்துகிறார் அந்த வகையில் சூரரைப்போற்று ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்ற..

நிலையில் இப்பொழுது பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் கை கோர்த்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி உட்பட பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். எதற்கும் துணிந்தவன் திரைப்படம்.

பல்வேறு தடைகளைத் தாண்டி ஒருவழியாக வருகின்ற 10 ஆம் தேதி கோலாகலமாக திரை அரங்கில் வெளியாகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்கள் வேற லெவெலில் எதிர்பார்த்து உள்ளனர். இந்த படத்தில் இருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அதாவது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யா எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தான் அது.

அப்படி பார்க்கையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்காக நடிகர் சூரியா சுமார் 35 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் இந்த செய்தியை பரப்பிய கொண்டாடி வருகின்றனர்.