தமிழ் சினிமாவின் தற்போது டாப் நடிகர்களாக வலம் வரும் அஜித், விஜய், தனுஷ், சிம்பு போன்ற பலரும் தனது கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியின் மூலமே தற்போது உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றனர் அப்படி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.
இவர் முதலில் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அது இது எது, நடன நிகழ்ச்சி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் மேலும் இவரது காமெடி கலந்த பேச்சுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். பின்பு தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து துணை நடிகராக நடித்து வந்தார்.
அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் முதல் படமாக மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் பின்பு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம்.
உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டையும் நடத்தியது.சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் டான் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் கதாநாயகனாக முதல் படமாக மெரினா திரைப்படத்தில் அறிமுகமானார்.
சிவகார்த்திகேயன் முன்பே தான் முதன்முதலில் வாங்கிய சம்பளம் குறைந்து கல்லூரி விழா ஒன்றில் பேசியுள்ளார். அப்படி சிவகார்த்திகேயன் நான் முதலில் வாங்கிய சம்பளம் 10,000 என்றும் அதை இயக்குனர் பாண்டியராஜிடம் வாங்கினேன் என்றும் கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையதளத்தில் பரவி வருகின்றன.