அந்த காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்ததற்கு நடிகர் சத்யராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? நினைச்சுப் பார்த்தாலே நமக்கு கூட அழுகை வந்துவிடும்.

sathyaraj
sathyaraj

தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்து தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ் இவர் சட்டம் என் கையில் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து மக்களைக் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் இவர் வில்லனாக நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விட்டது அதனைத்தொடர்ந்து இவரை கதாநாயகனாக பார்க்க ரசிகர்கள் பலரும் ஆசைப்பட்டார்கள் பின்பு கதாநாயகனாக நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு சூப்பர் ஹிட் ஆகி விட்டது அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாகவே கொடிகட்டி பறந்து வந்தார்.

தற்பொழுது வயதாகி விட்டாலும் இவர் நடிக்கும் திரைப்படங்களுக்காக இவர் அதிகம் சம்பளம் வாங்கி வருகிறார் அதேபோல் இவர் பாகுபலி என்ற திரைப்படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கி விட்டார் இந்த கதாபாத்திரத்தில் இவர் மட்டுமே நடிக்க முடியும் அந்த அளவிற்கு இதில் மிகவும் கன கச்சிதமாக நடித்து மக்களை கவர்ந்து தற்போது நிறைய திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

என்னதான் இவர் தற்போது கைநிறைய சம்பளம் வாங்கினாலும் இவரது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் இவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள் என்பது பற்றி ஒரு தகவல் இவரே கூறியதாக இணையத்தில் கசிந்துள்ளது அதில் இவருக்கு மிகப்பெரிய சம்பளமே அந்த காலத்தில் 500 முதல் 1000 ரூபாய் வரை தானாம் அதனை தவிர்த்து பார்த்தால்.

sathyaraj
sathyaraj

இவர் அதிகபட்சமாக அந்த காலத்திலேயே வாங்கும் வகையில் இவர் நடித்த  தங்கைக்கோர் கீதம் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் டி.ஆர் அவர்கள் இவருக்கு நான்காயிரம் ரூபாய் சம்பளம் வழங்கினாராம் இதனை இவரே கூறியதாக இந்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் டி.ஆர் மட்டுமே இவரது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் அப்பொழுது கூட இவருக்கு மிகப் பெரிய மனசு இருந்துள்ளது என கூறி வருகிறார்கள்.