தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து ஆக்ஷன், காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து ஓடி கொண்டிருந்தவர் நடிகர் பிரபாஸ் இருப்பினும் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடையவில்லை இந்த நிலையில் தான் இயக்குனர் ராஜமௌலி பிரபாஸுக்கு பாகுபலி படத்தின் கதையை கூற கடினமாக உழைத்தார்.
அதற்கேற்ற பலனும் படம் வெளிவந்து கிடைத்தது பாகுபலி முதல் பாகம் அதிரிபுதிரி ஹிட் அடித்தன் காரணமாக அதன் இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டது அந்தப் படமும் மாபெரும் வெற்றி படமாக மாற ராஜமௌலி மற்றும் நடிகர் பிரபாஸ்ஸின் சினிமா பயணம் வேற லெவெலில் விசுவரூபம் எடுத்தது.
இப்பொழுது நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் 200 கோடி பட்ஜெட் படமாக இருந்து வருகிறது அதற்கு ஏற்றார்போல தனது சம்பளத்தையும் அதிகமாக உயர்த்தி வருகிறார் சொல்லப்போனால் நடிகர் பிரபாஸ் இப்பொழுது ஒரு திரைப்படத்திற்கு சுமார் 80 லிருந்து 100 கோடி சம்பளம் வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பொழுதுகூட நடிகர் பிரபாஸ் கையில் பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன அந்த வகையில் ராதேஷ்யாம், ஆதி புருஸ் மற்றும் சாலர் ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருக்கின்றன இதில் முதலாவதாக ராதே ஷ்யாம் வெளிவர இருக்கிறது இந்த படத்திலிருந்து இதுவரை பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்திலிருந்து ஒரு சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது அதாவது இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் பிரபாஸ் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தான் அது. அதன்படி பார்க்கையில் நடிகர் பிரபாஸ் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்ததற்காக சுமார் 100 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.