‘பொன்னியின் செல்வன்’ ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த சென்சார் தகவல்..

ponniyin-selvan-1
ponniyin-selvan-1

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் வருகின்ற 30ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

மேலும் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இவ்வாறு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ரன்னிங் டைம் குறித்த தகவலை பட குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

இந்தியாவில் இன்னும் இந்த படம் சென்சார் செய்யப்படவில்லை என்றாலும் ஒரு சில வெளிநாடுகளில் இந்த படம் சென்சார் செய்து ரன்னிங் டைம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பார்க்கும்பொழுது இந்த படத்தின் முதல் பாகம் ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் என்றும் இரண்டாவது பாதி ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் என்றும் மொத்தம் இந்த திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது.

இருந்தாலும் இந்தியாவில் இந்த படம் சென்சார் செய்யப்பட்ட பிறகு தான் இறுதி ரன்னிங் டைம் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ் கான், லால் மோகன், ராம் பாலாஜி, சக்திவேல் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தினை லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். இவ்வாறு ஏராளமான நட்சத்திரங்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ரிலீஸ்க்காகும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.