நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா.? வைரலாகும் தகவல்..

thunivu 1
thunivu 1

தற்பொழுது நடிகர் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில் தற்பொழுது இந்த படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது மேலும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ஜில்லா ஜில்லா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது இந்த பாடலைத் தொடர்ந்து காசேதான் கடவுளடா என்ற பாடலும் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் துணிவு திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் தற்போது வெளிநாடுகளில் உள்ள பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இந்த முன்பதிவில் இருந்து நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது துணிவு திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் அதாவது 165 நிமிடங்கள் என தெரியவந்துள்ளது இருந்தாலும் அதிகாரப்பூர்வமான சென்சார் தகவல் வெளிவராத நிலையில் துணிவு திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்து தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. இவ்வாறு தற்பொழுது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் பேங்கில் கொள்ளையடிக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித்தை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பொங்கலை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாகும் அன்று நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படத்தை விட நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு குறைந்த அளவு மட்டுமே திரையரங்குகள் கிடைத்துள்ளது இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.