சினிமா உலகில் பயணிக்கின்ற பெரும்பாலான பிரபலங்கள் தான் செய்கின்ற தொழிலில் தாண்டி மற்றவற்றிலும் தனது திறமையை வெளிக்காட்டுகின்றன அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனன் படங்களை இயக்குவதையும் தாண்டி தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.
அந்த வகையில் கெஸ்ட் ரோல், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் பின்னி பெடல் எடுப்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. மேலும் பல்வேறு படங்களையும் இயக்கி வெற்றி கண்டு வருகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் “துருவ நட்சத்திரம்” முதல் முறையாக நடிகர் விக்ரமை வைத்து.
இவர் படத்தை எடுத்து இருந்தார் ஆனால் இந்த திரைப்படம் இதுவரை படத்தின் சூட்டிங் முடியாமல் இழுபறியில் தான் உள்ளது இந்த திரைப் படத்தில் விக்ரமுடன் கைகோர்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை சிம்ரன், ராதிகா சரத்குமார், டிடி என்கின்ற திவ்யதர்ஷினி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படம் இதுவரை வெளியாக இருக்க காரணம் பைனான்ஸ் பிரச்சனை என கூறப்படுகிறது ஆனால் ஒரு சில வேளைகளில் இன்னும் பாதியில் கிடைப்பதால் அதை முடித்துவிட்டால் நல்லது என எதிர்பார்க்கப்படுகிறது சமீபத்தில் கூட நடிகர் விக்ரம் இன்னும் 15 நாள் கால்ஷீட் கொடுத்து படத்தை முடிக்குமாறு விக்ரம் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
ஆனால் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் முதலில் டப்பிங் வேலைகளை முடியுங்கள் மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிட்டார் இதனால் நடிகர் விக்ரமுக்கும், கௌதம் மேனனுக்கும் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.