தமிழ் சினிமாவில் நடிகராக வெற்றியைக் கண்டு வரும் சசிகுமார் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனராக தான் சினிமாவில் அறிமுகமானார். இவர் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் ஒரு சில காரணங்களால் அவர் நடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சிறப்பான படங்களை எடுத்து வெற்றி கண்ட இயக்குனர்களின் படங்களில் நடித்ததால் சசிகுமாருக்கு வெகுவிரைவிலேயே வெற்றி நாயகனாக மாறினார் மேலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
அந்த வகையில் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன், போராளி, பேட்ட, நாடோடிகள் போன்ற படத்தில் இவரது நடிப்பு அசாதாரணமாக இருந்ததோடு மக்களுக்கு விருந்து கொடுக்கும் அமைந்து உள்ளன.
இதனால் சினிமாவில் கவனிக்ககூடிய நடிகராக பார்க்கப்படுகிறார். இவர் நடிப்பில் தற்போது எம்ஜிஆர் மகன் படம் உருவாகி உள்ளது. இந்தப்படம் வெகுவிரைவிலேயே வெளிவர இருக்கிறது இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் இவரைப் பார்த்தால் கேட்கும் முதல் கேள்வி நீங்கள் எப்பொழுது படத்தை இயக்குவிர்கள் என்பதுதான் அதற்கு பல காலங்களாக மௌனமாக இருந்த சசிகுமார் சமீபத்தில் அதற்கும் பதில் அளித்துள்ளார்.
எனக்கு சினிமா உலகில் படங்களை இயக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை ஆனால் அதற்கான சூழ்நிலையை சமிப காலமாக அமையவில்லை என்று குறிப்பிட்டார். சுப்ரமணியபுரம் படத்தை கொண்டாடிய ரசிகர்கள் என்னிடம் சுப்ரமணியம் படத்திற்கு பிறகு ஏன் இவ்வளவு கேப் என கேட்டனர் ஈசன் படம் முடிந்த பிறகு ஒரு வரலாற்று கதையை எடுக்க நினைத்தேன் ஆனால் பட்ஜெட் பிராப்ளம் அதனால் என்னால் படங்களை இயக்க முடியவில்லை.
அதுமட்டுமின்றி தயாரிப்பாளருக்கும் எனக்கும் கொஞ்சம் நெறுக்கடி ஏற்பட்டதால் அதை எப்படியாவது மீட்க வேண்டும் என்பதற்காக நடிப்பில் கவனம் செலுத்தினேன். விரைவில் நான் படங்களை இயக்க கவனம் செலுத்துவேன் என்றும் கூறினார்.