காஜல் அகர்வால் படங்களில் பெரும்பாலும் வெள்ளை டிரஸ் போட்டுக்கொண்டு நடிக்க காரணம் என்ன தெரியுமா.? வெளிவந்த சுவாரஸ்ய தகவல்.

kajal-agarwal
kajal-agarwal

தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தவிர்க்கமுடியாத ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது சிறந்த நடிப்பையும், கவர்ச்சியையும் காட்டுவது நடிகை காஜல் அகர்வாலின் வழக்கம். அந்த காரணத்தினால் இவருக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர்.

தமிழில் இவர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தியவர் மேலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், தனுஷ், சூர்யா போன்ற பல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது தமிழில் இவர் பழனி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் பின் படிப்படியாக சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில்  உச்ச நட்சத்திரங்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இப்படி சினிமா உலகில் ஓடிக் கொண்டிருந்த இவர் சமீப காலமாக நடிக்காமல் இருக்கிறார் காரணம் தற்போது கர்ப்பமாக இருப்பதால் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் அதிலிருந்து படிப்படியாக வெளியேறிய வண்ணமே இருக்கிறார். இந்தியன் 2 படம், ரவுடி பேபி போன்ற தமிழ் படத்தில் இருந்து அவர் விலகி உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

மேலும் தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் இருந்து தற்போது அவர் விலகி உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் அவரைப் பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது ஒவ்வொருவருக்கும் ஒரு சென்டிமெண்ட் இருக்கும் அந்த வகையில் நடிகர் காஜல் அகர்வால் வெள்ளை ட்ரெஸ்ஸை போட்டுக் கொண்டு சினிமாவில் நடித்தால் அந்த திரைப்படம் வெற்றி அடையும் என்பது இவரது நம்பிக்கையாம்.

kajal-agarwal
kajal-agarwal

படத்தின் முதல்நாள் காட்சிகளில் வெள்ளை டிரஸ் போட்டுக்கொண்டு வலம் வருவாராம். அந்த படங்களும் வெற்றி அடைந்துள்ளன மேலும் இவர் பல்வேறு முதல் காட்சிகளில் வெள்ளை நிற டிரஸ்ஸில் தான் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. வெள்ளை டிரஸ் என்றால் அவருக்கு அவ்வளவு பிரியம் இவரைப் போலவே தமிழ் சினிமாவில் பல்வேறு இயக்குனர்களும் செண்டிமெண்டல் சீன்களை படத்தில் வைத்தால் அந்த படம் வெற்றி அடையும் என்பது அவர்களது பழக்கமாக இருக்கிறது.