அதிரடியாக உடல் எடையைக் குறைத்து வரும் அஜித் – என்ன காரணம் தெரியுமா.? இதுவரை இத்தனை கிலோ குறைத்து உள்ளாரா..

ajith
ajith

கடைசியாக நடிகர் அஜித்குமார் விசுவாசம் நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்களில் நடித்து மக்களுக்கு விருந்து படைத்தார் அதனை தொடர்ந்து இரண்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் வலிமை படம் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

மேலும் எதிர்பார்க்காத அளவிற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்குகிறது இதன் மூலம் பல்வேறு பிரபலங்களின் படங்களை முந்தி முதலிடத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது வலிமை. பொதுவாக சனி ஞாயிறு ஆகிய நாட்களில்தான் மக்கள் கூட்டம் அலைமோதும்.

ஆனால் வலிமை திரைப்படத்தை பார்க்க தற்பொழுது திங்கள் செவ்வாய் புதன் கிழமையாக இருந்தாலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் வரவேற்பு அதிகரித்து உள்ளது இதனால் அதிக வசூலை அள்ளுவதால் விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

வலிமை திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூலை குறிவைத்து போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் தனது 60வது திரைப்படத்தில் நடிக்க முனைப்பு காட்டுகிறார் வெகு விரைவிலேயே இந்த படத்தின் சூட்டிங் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை வலிமை படத்தை எடுத்த அதே படக்குழு மீண்டும் ஒருமுறை பணியாற்றுகிறது. ஹச். வினோத் மூன்றாவது முறையாக அஜித்துடன் கைகோர்க்கிறார் அதேபோல போனிகபூர் இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்க இருக்கிறார்.

இந்தப் படத்தின் கதை அஜித்துக்கு சற்று வித்தியாசமான கதை என்பதால் அஜித் அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து வருகிறார். சமீபத்தில்கூட தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டு அசத்தி இருந்தார் இப்பொழுது அதிரடியாக ஜிம் ஒர்க் அவுட் செய்து உடல் எடையைக் குறைத்து வருகிறாராம்.

AK 61 படத்திற்காக சுமார் 25 கிலோ உடல் எடையை குறைக்க உள்ளாராம் தற்போது வரை 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அஜித்தின் 61 வது திரைப்படத்தில் மங்காத்தா படத்தில் எப்படி இருந்தாரோ அதே போல நீங்கள் அஜித்தை பார்க்கலாம் என கூறப்படுகிறது.